உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

நேபாள பேரழிவு: பலி எண்ணிக்கை 939 ஆக அதிகரிப்பு

உலக செய்திகள் 1 நாள் முன்
64 பார்வைகள்

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 4,250 ஆக உயர்ந்துள்ளது.

திபெத்–நேபாள எல்லையில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து, கடந்த மாதம்-

 26ஆம் திகதி லெண்டே நதியில் ஏற்பட்ட வெள்ளம் போடே கோஷி நதியில் பெருக்கெடுத்தது. இதனால் கரையோர கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், வீதிகள் மற்றும் நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

போடே கோஷி நதியின் வெள்ளம் திரிசூலி மற்றும் நாராயணி நதிகளிலும் கலந்ததால் ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி, கோர்கா மற்றும் தனாஹு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் 85 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 320 வெளிநாட்டவர்கள் உட்பட 4,250 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கண்டக் ஆற்றில் அடையாளம் காணப்படாத மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலங்கள் மீட்கப்பட்டு நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவா பகுதியில் சிக்கியிருந்த மூன்று இந்தியர்களை நேபாள இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக நேபாளத்துக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

காலநிலை மாற்றத்துக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை தேவை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவு, பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக…

78 0 0
உலக செய்திகள்

சவூதியில் ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு’ நிரந்தர செயலகம்

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

39 0 0
உலக செய்திகள்

டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்க ராணுவ செயலாளர் பதவி விலகல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார். ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல், சுமார் 18 மாதங்கள் பதவி…

46 0 0
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்:

ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானின் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், உலகச் சந்தையில் மசகு எண்ணெய்…

75 0 0