உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

பஸிலின் சதித்திட்டத்தாலேயே நாங்கள் ஒதுங்கிக்கொண்டோம்.!

58 பார்வைகள்

அமெரிக்காவுக்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கும், இந்நாட்டின் தேசியவாத அரசியலை அழித்தொழித்த பஸில் ராஜபக்ஷ சதித்திட்டம் தீட்டி, இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே தேர்தலை நடத்தி, மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பி விட்டு விரைவாக ஜனாதிபதியாகும் கனவில் செயற்பட்டபோது நாம் வேதனையடைந்து ஒதுங்கிக்கொண்டோம் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர சுட்டிக்காட்டினார்.

மொனராகலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் தொகுதி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
“எங்களை மற்றொரு ராஜபக்ஷவின் அவதாரம் எனக் கூறிச் சிலர் கூச்சலிடுகின்றனர். அமெரிக்காவில் ஒளிந்துகொண்டு தேசியவாத அரசியலை அழித்த பஸில் ராஜபக்ஷ, மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பிவிட்டுத் தாமே ஜனாதிபதியாகும் கனவில் சதித்திட்டம் தீட்டியபோதே நாங்கள் மனவருத்தத்துடன் ஒதுங்கிக்கொண்டோம்.

இன்று நாட்டின் ஜனநாயகம் உச்சக்கட்டத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மகாநாயக்க தேரர்கள் கூறினாலும் தனக்குத் தேவையானதையே செய்வேன் எனத் தற்போதைய ஜனாதிபதி கூறியுள்ளார். இவ்வாறான சர்வாதிகாரியை மக்கள் கொண்டுவராத போதிலும் சுயநலமிக்க அரசியல்வாதிகளே கொண்டுவந்தனர்.

இன்று அனைவரும் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சினை பொருளாதாரம் எனில் அதற்கான தீர்வும் பொருளாதாரமாகவே அமைய வேண்டும்.

பிராந்தியத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் பயன்படுத்திய ‘தொழில்முனைவோர் அரசு’ கோட்பாட்டையே நாம் முன்மொழிகின்றோம். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றி பேசாமல் வரிகளை விதிப்பது பற்றியும் கருவூலத்தை நிரப்புவது பற்றியும் மட்டுமே பேசுகின்றனர். 2028 இல் செலுத்த வேண்டிய மிகப்பெரிய கடன் சுமை குறித்து எந்த உரையாடலையும் அவர்கள் நடத்தவில்லை.

செவனகலை சர்க்கரை ஆலையை மூடி அதனை விற்பனை செய்யும் நோக்கிலேயே அரசு செயற்படுகின்றது.

2029 ஆம் ஆண்டாகும் போது ‘தொழில்முனைவோர் அரசை’ உருவாக்கி, செவனகலை உள்ளிட்ட நிறுவனங்களின் இலாபத்தை மும்மடங்காக உயர்த்தும் வேலைத்திட்டத்தை முற்போக்குச் சக்திகளை ஒன்றிணைத்து வழங்குவோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை, புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயம், கால்நடை,…

24 0 0
இலங்கை செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய…

37 0 0
இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

19 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

48 0 0