உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு.!

38 பார்வைகள்

வட்டவளை பிளாக் வாட்டர் தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கனடாவில் வசிக்கும் டென்மார்க் அன்னை அபிராமி உபாசகியின் சீடர்கள் (கனடா நாட்டைச் சேர்ந்த) தமது நிதிப் பங்களிப்பின் ஊடாக உடைகளை வழங்கி வைத்துள்ளனர்.

குறித்த உதவிப் பொருட்கள், நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் எஸ். தியாகு அவர்களின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டன.

அதேவேளை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவையை கருத்திற்கொண்டு, மத்திய மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான திரு. ராஜாராம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் படுக்கை மெத்தைகளும் வழங்கப்பட்டன.

இவ்வாறு பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் வழங்கப்பட்ட உடைகள் மற்றும் படுக்கை மெத்தைகள், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை, புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயம், கால்நடை,…

24 0 0
இலங்கை செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய…

37 0 0
இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

19 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

48 0 0