உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

வட சைப்ரஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து : 8 பேர் பலி! 18 பேர் மாயம்!!

உலக செய்திகள் 40 நிமிடங்கள் முன்
51 பார்வைகள்

வட சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18பேர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட சைப்ரஸின் கிரினியா துறைமுகத்திலிருந்து துருக்கியின் தசுசு துறைமுகம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு படகு ஒன்றே, துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பிட்ட படகில் 259 பயணிகளும் 8 பணியாளர்களும் அடங்கலாக மொத்தம் 267 பேர் பயணித்துள்ளதாக வட சைப்ரஸ் போக்குவரத்து அமைச்சர் எர்ஹான் அரிக்லி தெரிவித்துள்ளார்.

கடலில் கவிழ்ந்த படகின் மீது சிவப்பு நிற உயிர் பாதுகாப்பு அங்கிகளை அணிந்தவாறு பயணிகள் அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரப் காவல்படையினரும் மீட்புக் குழுவினரும் படகிலிருந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக கிரினியா துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானின் லாரக் தீவில் அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் லாரக் (Larak) தீவில் இருந்த இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் மீது ஞாயிற்றுக்கிழமையன்று (30) தமது படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜூலை…

54 0 0
உலக செய்திகள்

நைஜரில் கலவரம் : கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவிப்பு!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் நியாமி நகரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் அரசுத் தளங்களுக்கு அருகில் பல மணி…

36 0 0
உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு!

உக்ரைனின் கீவ் (Kyvia) பிராந்தியத்திலுள்ள இராணுவ வெடிபொருள் சேமிப்புக் கிடங்கு மீது ரஷ்யா நடத்திய மிக தீவிரமான வான் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக…

57 0 0
உலக செய்திகள்

சீன அதிகாரிகள் உரிய தகவல்களைத் தரவில்லை – நேபாளம் குற்றச்சாட்டு!

நேபாளம் மற்றும் சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த மே 27 அன்று காத்மாண்டுவில் சந்தித்து பனிப்பாறை அபாயங்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு குறித்து விவாதித்துள்ளனர். எனினும் பனிப்பாறைகளின்…

34 0 0