உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

“நீதிக்கான நீள் பயணம்” மாநாட்டில் சர்வதேச பிரமுகர்கள் பங்கேற்று பார்வையிட்ட கண்காட்சி.!

இலங்கை செய்திகள் 23 நிமிடங்கள் முன்
41 பார்வைகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற “நீதிக்கான நீள் பயணம்” எனும் மாபெரும் சர்வதேச மாநாட்டில் சர்வதேசப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

மாநாடு நடைபெற்ற மண்டபத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பயன்பாட்டுப் பொருட்கள், அவர்கள் விரும்பிச் சேகரித்த பொருட்கள் மற்றும் அவர்களின் நினைவாக இன்று வரை உறவுகளிடம் எஞ்சியுள்ள பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மாநாட்டில் கலந்துகொண்ட சர்வதேச பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்கள் இந்த நினைவு பொருட்களைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எங்கள் ஆட்சியில் கட்டாயம் நீதி கிடைக்கும்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு – கிழக்கு உறவுகள் நடத்திய போராட்டத்தையும் மாநாட்டையும் தாம் முழுமையாக மதிப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்…

65 0 0
இலங்கை செய்திகள்

ராஜபக்ஷ அணி மீண்டும் அரியணை ஏற மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.!

பெரும் ஊழல்வாதிகளும் கொலைகாரக் கும்பலைச் சேர்ந்தவர்களுமான ராஜபக்ஷ அணியினர் மீண்டும் இந்த நாட்டின் அரியணை ஏறுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று மக்கள் விடுதலை…

51 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மின்சாரம் தாக்கி அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு.!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில்…

25 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது.!

வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

35 0 0