உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு!

உலக செய்திகள் 44 நிமிடங்கள் முன்
50 பார்வைகள்

உக்ரைனின் கீவ் (Kyvia) பிராந்தியத்திலுள்ள இராணுவ வெடிபொருள் சேமிப்புக் கிடங்கு மீது ரஷ்யா நடத்திய மிக தீவிரமான வான் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் காணாமல் போயுள்ள நால்வரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கீவ் நகரை இலக்கு வைத்து ரஷ்யப் படைகள் மேற்கொண்ட இந்த தாக்குதலே, நடப்பாண்டில் அப்பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலாக பதிவாகியுள்ளது.

பீரங்கி குண்டுகள், மிதிவெடிகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளடங்கலாக பல்வேறு வெடி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் மீதே இந்த குண்டுவீச்சு நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலால் ஏற்பட்ட தீ பரவலை தீயணைப்புப் படையினர் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள போதிலும், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள அழிவுகளும் பாதிப்புகளும் மிக அதிகமாக காணப்படுவதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. கடந்த வாரம் முழுவதும் ரஷ்யா உக்ரைன் மீது சுமார் 2,000 ட்ரோன்கள், 1,600 வான்வழி குண்டுகள் மற்றும் 31 ஏவுகணைகளை ஏவி கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் இத்தகைய ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் உரிய பதிலடி நிச்சயம் வழங்கப்படும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சீன அதிகாரிகள் உரிய தகவல்களைத் தரவில்லை – நேபாளம் குற்றச்சாட்டு!

நேபாளம் மற்றும் சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த மே 27 அன்று காத்மாண்டுவில் சந்தித்து பனிப்பாறை அபாயங்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு குறித்து விவாதித்துள்ளனர். எனினும் பனிப்பாறைகளின்…

32 0 0
உலக செய்திகள்

நேபாள வெள்ளப் பேரழிவு – உயிரிழப்பு 700 ஐ தாண்டியது

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இதன்படி, குறித்த பேரழிவில் நேபாளத்தில் 700-க்கும் மேற்பட்டோரும், சீனாவில் 16-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.…

63 0 0
உலக செய்திகள்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

இமயமலைத் தொடரில் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்ததால் நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த…

54 0 0
உலக செய்திகள்

ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற ‘லா டொமாட்டினா’ திருவிழா

ஸ்பெயினின் உலகப் புகழ்பெற்ற ‘லா டொமாட்டினா’ ஸ்பெயின் – கோலாகலமாக நடைபெற்ற ‘லா டொமாட்டினா’ திருவிழா) திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உற்சாகமாக தக்காளி சண்டையில் ஈடுபட்டனர். வருடந்தோறும்…

83 0 0