உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

தேசிய மக்கள் சக்தியின் கண்டாவளை பிரதேசத்திற்கான மக்கள் அலுவலகம் அமைச்சர் சறோஜா சாவித்திரியினால் திறந்து வைப்பு!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
93 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தியின் கண்டாவளை பிரதேசத்திற்கான மக்கள் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் கண்டாவளை பிரதேச அமைப்பாளர் கேதீஸ்வரன் சஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் குறித்த அலுவலகத்தினை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சறோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தினை திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் இளையதம்பி கணேசபிள்ளை, கட்சி ஆதரவாளர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் கலந்து கொண்டு மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

மக்களுக்கும் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்கத் தரப்பினருக்கும் இடையிலான தொடர்பாடலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த அலுவலகம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து கொள்வதற்குமாகவும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் குறித்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது

நாங்கள் இன்றைக்கு முரசுமோட்டை மக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஒன்றினை இங்கே திறந்து வைத்திருக்கின்றோம்.

இதனூடாக இந்த கிளிநொச்சி பிரதேசத்தில் நாங்கள் பார்க்கின்ற இந்த முரசுமோட்டை என்ற இடத்தில் மக்களுக்கு தேவையான அவர்களுடைய தேவப்பாடுகளை வந்து கூறுவதற்கும், எங்களுடைய பிரதேச தலைவர்களுடன் தொடர்பாடல் கொள்வதற்கும் இந்த அலுவலகம் உதவியாக இருக்கும் என்பதை நாங்கள் நினைக்கின்றோம்.

அதேபோல எங்களுடைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் அபிவிருத்தி பணிகளையும் மக்களை வந்தடைவதற்கும், அவைகளைப் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும், ஏதாவது உங்களுக்கான சிரமங்கள் பிரதேசங்களில் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் இருந்தால், இங்கு பிரதேச தலைவர்கள் ஊடாக அரசாங்கத்திற்கு அறிவித்துவிட்டு துரிதமான இந்த நடவடிக்கைகளை உங்களுக்கு தேவைப்படும் வகையில் விரிவாக்கிக் கொள்வதற்கான உதவியாகத்தான் இவ்வாறான அலுவலகங்களை நாங்கள் திறந்து வைத்திருக்கின்றோம்.

நாங்கள் இந்த இரண்டு வருடம் ஜனாதிபதி அவர்களுடைய பதவியேற்பிற்கு இரண்டு வருடம் பூர்த்தியாகின்ற இந்த சந்தர்ப்பத்தில், நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்மையாகவே மக்களாட்சி என்ற வகையில் மக்களுக்கு அண்மித்தோர் ஆட்சியாக நாங்கள் மக்களை நாடி வருகின்றது.

பிரதேச பிரதேசமாக இங்கு நாடு முழுவதும் இருக்கின்ற ஒவ்வொரு ஊராக இவ்வாறான அலுவலகங்களை திறந்து வைப்பதற்கும், எங்களுடைய பிரதேச தலைவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு வசதி ஏற்படுத்தி மக்களை வந்து நாடி மக்களுடைய பிரச்சினைகளை நாங்கள் கண்டறிந்து கொண்டிருக்கின்றோம்.

நான் நேற்றைய தினமும் இன்றும் நான் முல்லைத்தீவு, கிளிநொச்சி இரண்டு பிரதேசங்களிலும் இருக்கின்ற மகளிர் அமைப்புகளை சந்தித்து, அதேபோல மகளிர்களுக்கு உள்ள பிரச்சினைகள், சிறுவர்களுக்கு உள்ள பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் நிறைய கலந்து ஆலோசித்திருக்கின்றோம்.

முக்கியமாக இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி அபிவிருத்தி பணிகள் நடத்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில், அதேபோல சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் முகம் கொடுக்க நேரிட்டிருக்கின்ற பிரச்சினைகளையும் நாங்கள் கண்டறிந்திருக்கின்றோம்.

முக்கியமாக இ

இந்த போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது. அதேபோல இந்த முகநூல் இந்த இணையதளத்தில் பெண்களுக்கான பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருவது, சிறுவர்களுடைய கல்வி பிரச்சினை, அவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகல் போன்ற பலவற்றுக்கு எங்களுக்கான தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும், அதேபோல அதற்கான பதில்களை கண்டுகொள்ள வேண்டிய அவசியத்தையும் நாங்கள் வலியுறுத்தி இருக்கின்றோம். அதை நாங்கள் மக்களுடன் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஊடகவியலாளரின் கேள்வி
இன்றைய தினமும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக, இன்றைய தினமும் தங்களுடைய அம்மாக்கள் தங்களுடைய குழந்தைகளைத் தேடி வீதிகளிலே இன்றைய தினமும் போராட்டங்களை மேற்கொண்டனர். இந்த காணாமல் போன அம்மாக்களுக்கு உங்களுடைய அமைச்சு சம்பந்தப்பட்ட விடயம் என்ற ரீதியில், காணாமல் போனவர்களுக்காகத் தேடப்படுகின்ற அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற…”

அமைச்சர்: உண்மையிலேயே நாங்கள் கிட்டடயில் பார்த்தோம் என்று சொன்னால், எங்களுடைய இந்த சட்டத்துறை அமைச்சரும் இங்கே இந்த பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அவர்களை சந்திப்பு நடந்தது.

அதேபோல நாங்கள் உண்மையாகவே இந்த மக்களுக்கான எங்களுடைய அனுதாபங்களையும் அதேபோல நாங்கள் எங்களுடைய அனுதாபங்களை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நடந்திருக்கின்ற இந்த அசௌகரியங்கள் அனைத்துக்கும் மத்தியிலும் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்ற தங்களுடைய உயிர் உறவுகளைத் தேடி போராடிக் கொண்டிருக்கின்ற பெண்களுக்கு, அம்மாமார்களுக்கு, அதேபோல யுவதிகள் தவித்துக் கொண்டிருக்கின்ற விடயத்தை நாங்கள் பார்க்கின்றோம்.

அவர்களை வலுப்படுத்துவதற்கும், அவர்களுக்கான உண்மை நீதி என்ன, என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கும் எங்கள் அரசாங்கமும் எப்போதுமே இங்கு மட்டுமல்லாமல் இலங்கை முழுவதும் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது.

சட்டத்துறை அமைச்சரும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து அவர்களைக் கண்டு அவர்களுடன் ஆலோசித்திருந்தார். உண்மையாகவே எங்கள் அரசாங்கம் இவ்வாறான நிலைகளைக் கண்டறிந்து, நடந்திருக்கின்ற விடயங்களைப் பற்றி தேவையான பரிசோதனைகளையும் விசாரணைகளையும் நடத்திக் கொண்டு வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண் மற்றும் சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்.!

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்கள் 35…

41 0 0
இலங்கை செய்திகள்

பெற்றோல் விலைகள் குறைப்பு.!

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும்…

49 1 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் போ*தைப் பாவனையில் மாணவர்கள்; விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை.!

மது பாவிப்பவர்களை விட போதைப்பொருள் பாவனையாளர்களின் பாவனை மிகவும் அதிகமாகவும், அந்த குடும்ப நிலை மிகவும் சீரழிந்ததாகவும் இருக்கிறது. மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.…

35 0 0
இலங்கை செய்திகள்

வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்தில் தீப்பரவல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்தில் இன்று பிற்பகல் 4:00 மணியளவில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் வீடு ஒன்று பகுதியளவில் எரிந்துள்ளதுடன் பனை மரங்கள் சில தென்னை…

67 0 0