உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
74 பார்வைகள்

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இப்போட்டியில் அவர் ஈட்டியை 92.07 மீட்டர் தூரம் எறிந்து இந்த அபார வெற்றியைப் பதிவு செய்தார்.

அவரது விளையாட்டு வாழ்க்கையில் ஈட்டியை 92 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு எறிவது இது இரண்டாவது முறையாகும்.

தற்போது உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ருமேஷ் தரங்க, இந்த வரலாற்றுச் சாதனையை எட்டிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்று நாட்டின் தடகள வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

இலங்கை தடகள வரலாற்றில் ஈட்டி எறிதல் பிரிவில் பதிவான மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த எறிதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

உலகத் தடகள கூட்டமைப்பின் (World Athletics) தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சர்வதேச அளவில் இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ள ருமேஷ் தரங்கவின் இந்தச் சீரான திறமை, எதிர்வரும் சர்வதேச போட்டிகளிலும் இலங்கைக்குப் பதக்க வாய்ப்புகளை மேலும் உறுதி செய்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

39 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

68 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

47 0 0