உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 52 நிமிடங்கள் முன்
41 பார்வைகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களால் முன்னெடுக்கப்படும் நீதி கோரும் மாநாட்டுக்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், உள்நாட்டில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் வெள்ளை வான் கடத்தல்களாலும் அரச படைகளினாலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தேர்தல் காலத்தில் பல கதைகளைக் கூறிய போதிலும், எதையும் நீதியாகச் செய்யவில்லை.” – என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தற்போதைய அரசு “நாம்தானா பிள்ளைகளைக் கடத்தினோம்” என முதிர்ச்சியற்ற முறையில் நழுவிக்கொள்வதுடன், இராணுவத்தினரையும் ராஜபக்ஷக்களையும் பாதுகாக்கும் உத்தியையே கையாண்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த கால நிதி ஊழல்களுக்கும் சிங்கள மக்களைப் பாதித்த படுகொலைகளுக்கும் விசாரணை நடத்தும் அரசு, தமிழ் மக்கள் மீதான எந்தவொரு படுகொலைக்கும் கடத்தலுக்கும் இதுவரை நீதி விசாரணையை முன்னெடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.

“சர்வதேச அழுத்தங்களை நிவர்த்தி செய்வதற்காக அரசு பல்வேறு நீதிக்குப் புறம்பான உபாயங்களைக் கையாண்டு, அரச திணைக்களங்கள் மற்றும் ஆற்றலைப் பயன்படுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை உண்மைக்குப் புறம்பான நிகழ்ச்சி நிரல்களின் ஊடாக ஏமாற்றி அவர்களின் கோப்புகளை மூடுவதற்குக் காய் நகர்த்தி வருகின்றது.

எனவே, அத்தகைய அரச கபடங்களுக்கு இடமளிக்காது, தாய்மார்களின் நீதிக்கான போராட்டத்துக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டுக்கும் சகல தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.” – என்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மேலும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

64 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

75 0 0