உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டின் உடல் நிலை கவலைக்கிடம்!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
50 பார்வைகள்

நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச அரண்மனை தெரிவித்துள்ளது.

இரத்தத்தில் ஏற்பட்ட பக்ரீயா தொற்று (bacterial infection) காரணமாக கடந்த ஆகஸ்ட் 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்தாம் ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பல மணி நேரம் மருத்துவமனையில் உடனிருப்பதாகவும் அரண்மனை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இளவரசர் ஹாகோன் மற்றும் ராணி சோஞ்சா ஆகியோர் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர்.

மன்னரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர், ஜெர்மனி பயணத்தை ரத்து செய்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற சபாநாயகர் மசூத் கராகான்கனி ஐஸ்லாந்து பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பியுள்ளார்.

1991 முதல் நோர்வேயின் அரசராகவும் ஐரோப்பாவின் மிகவும் வயதான வாழும் மன்னராகவும் திகழும் ஹரால்ட், வயது முதிர்வு காரணமாக கடந்த 2024-ல் தனது அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைக் குறைத்துக் கொண்டார்.

என்றபோதிலும், தனது வாழ்நாள் முழுவதும் மன்னராகவே நீடிப்பேன் என்றும் பதவி விலகப் போவதில்லை என்றும் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற ‘லா டொமாட்டினா’ திருவிழா

ஸ்பெயினின் உலகப் புகழ்பெற்ற ‘லா டொமாட்டினா’ ஸ்பெயின் – கோலாகலமாக நடைபெற்ற ‘லா டொமாட்டினா’ திருவிழா) திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உற்சாகமாக தக்காளி சண்டையில் ஈடுபட்டனர். வருடந்தோறும்…

56 0 0
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோருக்கு இழப்பீடு வழங்க மெட்டா இணக்கம்!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, தனது சமூக ஊடகத் தளங்கள் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்பையும் அடிமைத்தனத்தையும் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி 29 அமெரிக்கப்…

58 0 0
உலக செய்திகள்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில மணி நேரங்களுக்கு…

51 0 0
உலக செய்திகள்

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவது குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில், தனிமைச் சிறையில் தங்கள் தந்தை உயிரிழக்கும் அபாயம்…

50 0 0