உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

இலங்கை செய்திகள் 48 நிமிடங்கள் முன்
60 பார்வைகள்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார்.

நேபாளத்தில் நிலவும் தற்போதைய நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர், இலங்கை அரசின் முழுமையான ஆதரவையும் அனுதாபங்களையும் தெரிவித்தார்.

நேபாளத்துக்குத் தேவையான குறிப்பிட்ட உதவிகளை அடையாளம் கண்டு வழங்குவதற்காக, இலங்கையின் இடர்முகாமைத்துவ நிலையங்கள் நேபாள அதிகாரிகளுடன் இணைந்து நெருக்கமாகச் செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கிய நண்பனும் அண்டை நாடுமான நேபாளத்துக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் இலங்கை என்றும் உறுதியாகவும் தோழமையுடனும் இருக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

71 0 0