உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
52 பார்வைகள்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கிழக்கில் தமிழர்களின் தனித்துவ சைவசமய வழிபாடுகளுடனும் பாரம்பரியத்துடனும் பல நூற்றாண்டு காலமாக இந்த திருச்சடங்கு நடைபெற்று வருகின்றது.

கதவு திறத்தலுடன் ஆரம்பமான ஆலயத்தின் திருச்சடங்கு 11தினங்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வந்தன.

இந்த திருச்சடங்கில் அம்பாளின் முத்துச்சப்புர பவனி, வீரகம்பம் வெட்டுதல், நோன்பு கட்டுதல், மகா சக்தி யாகம் என பல்வேறு திருச்சடங்குகள் இடம்பெற்றன.

நேற்றைய தினம் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து தெய்வாதீகள் புடைசூழ தீக்குளிக்கு வருகைதந்து தீக்குளியில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தேவாதிகள் புடைசூழ தீ மிதிப்பு உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றன.

இந்த தீ மிதிப்பு உற்சவத்தில் இலங்கை உட்பட வெளிநாடுகளிலும் இருந்துவந்த பெருமளவான பக்தர்கள் பங்குகொண்டமை சிறப்பம்சமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நூதன முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் கைது!

இலங்கையிலிருந்து நூதன முறையில் இந்தியாவுக்குதங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் மடக்கிப் பிடிப்பு! இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற இந்திய நாட்டைச் சேர்ந்த…

38 0 0
இலங்கை செய்திகள்

உழவு இயந்திரம் மோதி சிறுமி உயிரிழப்பு!

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடத்தல்தீவு 10ஆம் பிரிவின் கிளை வீதி ஒன்றில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த…

33 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமைக்கு சுமந்திரன் கடும் கண்டனம்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும், அமைச்சர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடும்…

69 0 0
இலங்கை செய்திகள்

நிதி அல்ல எமக்கு நீதியே முதன்மையானது.!

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான். ஆனால், அதைவிட எமக்கு நீதியே மிக முக்கியமானது! நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு.…

40 0 0