ஷிரான் பாசிக்கின் சொத்துக்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!
தற்போது தடுப்புக்காவலில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், சுவிட்ஸர்லாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஹோட்டல்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்தத் தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிரான் பாசிக் குறித்த நாடுகளுக்குப் பயணம் செய்து இந்த வணிக நடவடிக்கைகளை நிர்வகித்து வந்துள்ளார்.
அத்தோடு டுபாயில் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ஒரு ஜீப்பை வைத்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக அவரிடத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹோட்டல்கள் மற்றும் பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள கைபேசிக் கடைகள் உள்ளிட்ட சொத்துக்களும் உள்ளடங்குகின்றன.