உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உக்ரைனில் இடிபாடுகளுக்குள் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயதுச் சிறுவன் உயிருடன் மீட்பு!

உலக செய்திகள் 10 நிமிடங்கள் முன்
110 பார்வைகள்

உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு அருகிலுள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் இடிபாடுகளுக்குள் சுமார் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கீவ் பிராந்தியத்தின் டைமர் கிராமத்தில் நேற்று முன்தினம் (22) அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன.

மீட்கப்பட்ட சிறுவன் சீரான நிலையில் இருப்பதாகவும், மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருக்கும் உக்ரைன் அதிகாரிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கீவ் பிராந்தியத்தின் விஷ்னேவ் பகுதியில் உள்ள கடையொன்றின் மீது நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றபோது மக்கள் உறக்கத்தில் இருந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சர் இவான் வைஹெவ்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், வெடிபொருள் நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மீட்புப் பணிகளுக்காக 130 இற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை மாலை வரையான நிலவரப்படி, உக்ரைனின் 10 பிராந்தியங்களில் 70 இற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இந்தோனேசியாவுக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள தீவுகளில் ஒன்றான பெண்டா தீவில் இன்று (21) பிற்பகல் 3.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளதாக…

150 0 0
உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

160 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

164 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

160 0 0