வருமான வரித் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.!
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது கோரிக்கைகளை முன்வைத்தும் அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, கொழும்பிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு (வருமான வரித் திணைக்களம்) முன்பாக இன்று நண்பகல் மதிய உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சாரதி சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



