உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வேலணை பிரதேச சபையின் 2027 பாதீடு நிறைவேற்றம்.!

இலங்கை செய்திகள் 15 நிமிடங்கள் முன்
102 பார்வைகள்

22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மேலதிக 14 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று (23.11.2026) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாதீட்டைச் சமர்ப்பித்த தவிசாளர், சபையின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், சோலைவரி உள்ளிட்ட நிதி உள்ளீர்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எடுத்துரைத்தார்.

அத்துடன் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் பாதீட்டை நிறைவேற்றுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனையடுத்து பாதீடு சபை விவாதத்துக்கு விடப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களையும் கருத்துக்களையும் முன்வைத்தனர்.

குறிப்பாக, மக்கள் நலனையும் தற்போதைய தேவைகளையும் கருத்தில் கொண்ட நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் பாதீட்டில் போதியளவில் உள்ளடக்கப்படவில்லை என்றும், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாத வகையில் முன்மொழிவுகள் அமைந்துள்ளதாகவும் எதிரணியினர் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் மக்களுக்கான ஒதுக்கீட்டின் பெறுமானம் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவில்லை என்றும் கூறி தேசிய மக்கள் சக்தி பாதீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை நிராகரித்தனர்.

தொடர்ந்து இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களின் பின்னர், பாதீட்டை நிறைவேற்றுவதற்காக தவிசாளர் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.

வாக்கெடுப்பில் பாதீட்டுக்கு ஆதரவாக 18 வாக்குகளும், எதிராக NPP யின் 4 வாக்குகளும் கிடைத்த நிலையில், மேலதிக 14 வாக்குகளால் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேலணை பிரதேச சபையின் 22 உறுப்பினர்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் பெற்றிருந்தன.
அதேவேளை, சுயேட்சைக் குழுக்கள் 3 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் முன்னணி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இந்த உறுப்பினர் பலத்தின் பின்னணியில் வேலணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் பயணித்த வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்து.!

வெலிகம, மிதிகம பிரதேசத்திலுள்ள புகையிரதக் கடவையொன்றில், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. காலியிலிருந்து மாத்தறை…

98 0 0
இலங்கை செய்திகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்; இறுதி முடிவை அவசரப்படுத்த வேண்டாம்.!

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றீடாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் அவசியம்; சிவில் தரப்பினரையும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என இலங்கைத்…

102 0 0
இலங்கை செய்திகள்

கஞ்சாவை கடத்திச் சென்ற மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் கைது.!

தனமல்வில, ஹம்பேகமுவ பகுதியில் வாகனமொன்றில் உலர்ந்த கஞ்சாவைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பேகமுவ பொலிஸ்…

101 0 0
இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் அரசுக்கு எதிராக அரச ஊழியர்கள் போர்க்கொடி.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (23) அரச சேவையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடளாவிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. அந்தவகையில்…

123 0 0