உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் சஹால்

இந்திய செய்திகள் 7 நிமிடங்கள் முன்
130 பார்வைகள்

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் தமது கட்சியில் இணைந்துள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, பாஜகவின் புதிதாக உருவாக்கப்பட்ட ‘தேசிய ஓபிசி அணியின் செயற்குழுவிற்கு அவர் விசேட அழைப்பாளராக’ நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அவரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.

முன்னதாக, யுஸ்வேந்திர சஹால், ஓபிசி முன்னணி தலைவர் அமர்பால் மௌரியாவை சந்தித்தார்.

அவருடன் ஒடிசாவைச் சேர்ந்த பேராசிரியர் அத்வைத் சரண் கட்நாயக் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சீமா சம்ரித்தி குஷ்வாஹா ஆகிய மேலும் இரண்டு சிறப்பு அழைப்பாளர்களின் பெயர்களும் இந்த அணி செயற்குழு சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கட்சிக்குள் தனக்குப் பொறுப்பு வழங்கியதற்காக பாஜக மேலிடத்திற்கு யுஸ்வேந்திர சஹால் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஹால், “பாஜக குடும்பத்திற்குள் எனக்கு ஓர் இடத்தையும் மரியாதையையும் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் மற்றும் ஓபிசி மோர்ச்சா தேசியத் தலைவர் அமர்பால் மௌரியா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

ஐந்து நாட்கள் கடந்தும் தொடரும் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகளின் உண்ணாவிரத போராட்டம்!

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்து அகதிகள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐவர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் தம்மை எந்த…

154 0 0
இந்திய செய்திகள்

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் : மு.க.ஸ்டாலின் பதிவு

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நீதிக்கட்சி பிறந்தது…

162 0 0
இந்திய செய்திகள்

மறைந்த எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (19) இரவு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

150 0 0
இந்திய செய்திகள்

‘ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ – வி.எஸ். பாபு மறைவுக்கு விஜய் உருக்கம்!

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது…

167 0 0