உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

இலங்கை செய்திகள் 24 நிமிடங்கள் முன்
67 பார்வைகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் மேலும் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் புதிதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பொறுப்பேற்றுள்ள தினேஸ் கருணாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு ஆளுநர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், வடக்கு மாகாணத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறந்த சேவையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

சந்திப்பின்போது, ஆளுநர். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தாம் கடமையாற்றியதை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க நினைவுகூர்ந்தார். இதன்போது வடக்கு மாகாணத்தின் நிலைமை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் அண்மைக்காலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், குறிப்பாக உயிர்கொல்லி போதைப்பொருட்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது, அத்துடன் வீதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இளையோரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இவ்விடயங்களில் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜெயமகா அவர்களும் கலந்துகொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

27 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

60 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

56 0 0