உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

இலங்கை செய்திகள் 40 நிமிடங்கள் முன்
49 பார்வைகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் மேலும் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் புதிதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பொறுப்பேற்றுள்ள தினேஸ் கருணாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24.08.2026) திங்கட்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு ஆளுநர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், வடக்கு மாகாணத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறந்த சேவையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

சந்திப்பின்போது, ஆளுநர். யாழ்ப்பாண மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தாம் கடமையாற்றியதை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க நினைவுகூர்ந்தார். இதன்போது வடக்கு மாகாணத்தின் நிலைமை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் அண்மைக்காலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், குறிப்பாக உயிர்கொல்லி போதைப்பொருட்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது, அத்துடன் வீதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இளையோரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இவ்விடயங்களில் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜெயமகா அவர்களும் கலந்துகொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

46 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

59 0 0