உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 40 நிமிடங்கள் முன்
44 பார்வைகள்

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன், நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு முக்கிய கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன உட்பட சிலர் நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு பின்னால் மறைந்துகொண்டு தலைமை நீதியரசர் மற்றும் நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பேசுவது முற்றிலும் தவறானது எனக் கண்டித்தார்.

இத்தகைய அவதூறுகள் தொடர்பில் நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுக்கள் உடனடி விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்களுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள 14 நீதிபதிகளையும் உள்ளடக்கிய விரிவான நீதிபதி அமர்வு (Full Bench) அமைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நாட்டில் தற்போதைய நிலைமையில் உணவுப் பணவீக்கம் 11% ஆகவும், பொதுப் பணவீக்கம் 7% ஆகவும் உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய சுரேன் ராகவன், நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார பின்னடைவு மற்றும் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரித்தார்.

எல்நினோ (El Niño) காலநிலை மாற்றத்தால் நாட்டின் நெல் விவசாயத்திற்கு ஏற்படவுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள அரசாங்கம் வைத்துள்ள தீர்வுகள் என்ன என்றும், நெல் கொள்முதலை அரசாங்கம் எவ்வாறு முன்னெடுக்கப்போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தீவிர செயற்பாட்டாளர் என்ற ஒரே காரணத்திற்காக, கணேசன் என்பவர் சென்னையின் துணை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், இவரை விடவும் தகுதியான பலர் இருக்கும் நிலையில் இந்த நியமனத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், இலங்கையின் ஊடகத் துறை துரதிர்ஷ்டவசமாக வீழ்ச்சியடைந்து வருவது குறித்தும் கவலை வெளியிட்டார்.

மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் தாமதம் காட்டி வருவது குறித்து கேள்வி எழுப்பிய அவர், வருமானம் கோடிக்கணக்கில் இருக்கும் போது ஏன் இந்த தேர்தலை நடத்த முடியாது என்றும், இது குறித்து பிரதமர் ஏன் அமைதி காக்கிறார் என்றும் வினவினார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியிலேயே தாம் இணைந்த எதிரணியில் அமர்வதாகவும், தனிப்பட்ட சிலரின் கருத்துக்களுடன் தமக்கு உடன்பாடில்லை என்றும் தெளிவுபடுத்தினார். முன்னாள் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவியிலிருந்து நீக்கப் பாடுபட்ட வழக்கறிஞர்கள் சிலர் அங்கு இருப்பதாகவும், அத்தகைய செயற்பாடுகளுடன் தம்மால் ஒருபோதும் உடன்பட முடியாது என்றும் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

46 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

19 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

36 0 0
இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

58 0 0