உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
84 பார்வைகள்

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இரு தனியார் பேருந்துகள், கினிகத்தேனைப் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் எவருக்கும் காயங்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை.

இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக பயணித்தமையினால், முன்னால் சென்ற பேருந்தின் பின்புறத்தில் மற்றைய பேருந்து மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அதில் பயணித்த பயணியொருவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பில் கினிகத்தேன பொலிசாரினால் விசாரணைகள் இடம் பெற்றுவருகின்றன.

குறித்த பேருந்தில் உயர்தரப்பரீட்சை மற்றும் பிரத்தியேக வகுப்புக்கு செல்லும் மாணவர்களும், பயணிகளும் பயணித்தனர். எனவே, போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அந்த பயணி குறிப்பிட்டார்.

தெய்வாதீனமாக இரு பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து கினிகத்தேன பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0