உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாடெங்கும் 2027 பட்ஜட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.!

இலங்கை செய்திகள் 12 நிமிடங்கள் முன்
97 பார்வைகள்

2027ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 25 ஆயிரம் ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று திங்கட்கிழமை அரச சேவையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டன.

வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் தாதியர்கள், வைத்தியர்கள் மற்றும் சுகாதார உதவிப் பணியாளர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகச் சுகாதாரத் துறையினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்ததால் நோயாளிகள் சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதேவேளை, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் (முல்லேரியா) தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை உதவிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகத் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமையுடன், அரச தாதியர் சங்க உறுப்பினர்கள் இன்று மதிய உணவு வேளையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதூர் தள வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை ஒரு மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச மற்றும் அரை அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை வழங்குமாறும், சம்பள உயர்வை நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல மாவட்டங்களிலும் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும், மன்னார் மாவட்ட செயலகத்துக்கு அருகிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதேபோன்று, குருநாகல் – மாஸ்பொத்த பிரதேச செயலகத்துக்கு முன்பாகவும், மாத்தறை பிரதேச செயலகத்துக்கு முன்பாகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

இதேவேளை, அரசின் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று தேசிய எதிர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுப் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச ஊழியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, இலங்கை…

98 0 0
இலங்கை செய்திகள்

தேர்தலை முடக்கி ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதா?

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள், கொழும்பு…

114 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு கஞ்சா மீட்பு.!

இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 77 கிலோகிராம் கஞ்சாவுடன் பைபர் படகொன்று இந்தியக் கடலோரக் காவல்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், பாம்பன் குந்துகால் கடற்கரைப்…

107 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…

116 0 0