உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

வாகன இறக்குமதி வரி மீது விதிக்கப்பட்ட 50% மிகைக் கட்டணம் டிசம்பர் வரை நீடிப்பு!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
44 பார்வைகள்

வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தினால் நாளை (15) வரை விதிக்கப்பட்டிருந்த 50% மிகைக் கட்டணம் (Surcharge) வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு இந்நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட (235 ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10அ பிரிவின் கீழ் ஜனாதிபதிக்களிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த மே மாதம் 15 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ கடன் கடிதங்கள் (LC) திறக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0