உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
39 பார்வைகள்

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, 3,920 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டம பகுதியில் அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தொட்டம கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இவர் தொட்டம மற்றும் பன்னல்கம ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அம்பாறை மாவட்ட பிரிவின் பதில் அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீரசிங்க மற்றும் அம்பாறை மாவட்டப் பிரிவு அதிகாரி சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையில், அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரா தலைமையிலான குழுவினரால் இச்சோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகத் தமன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தமன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் மனோஜ் அழகியவன்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0