உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சைபர் குற்றங்களுடன் தொடர்புடைய ஆயிரம் வௌிநாட்டவர்கள் கைது!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
55 பார்வைகள்

சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 1,093 வெளிநாட்டவர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘நாடே ஒன்றாக’ தேசிய திட்டம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டவர்களும், 2025 ஆம் ஆண்டில் 2 சம்பவங்களில் 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 24 சோதனைகளில் 1,093 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அந்த வெளிநாட்டவர்கள் அனைவரையும் நாடு கடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0