உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ரிஷாட் –ஜெகதீஸ்வரன் இடையே வாக்குவாதம்!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
87 பார்வைகள்

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று[13] நடைபெற்றபோது, மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி இடம்பெறும் மின்சாரத் தடைகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, “மின்வெட்டை பற்றி நாங்கள் கதைக்கக் கூடாதா?” என ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது பதிலளித்த ஜெகதீஸ்வரன், கடந்த அரசாங்கங்களில் அமைச்சர்களாகவும் அபிவிருத்திக் குழுத் தலைவர்களாகவும் இருந்தவர்கள், தற்போதைய நிலைமை தொடர்பாக கேள்வி எழுப்புவது குறித்து கருத்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம் தீவிரமடைந்ததுடன், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

நிலைமை மேலும் தீவிரமடையாத வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோர் தலையிட்டு இருவரையும் சமரசப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்சாரத் தடைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் சூடுபிடித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0