உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
155 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள் ஆன்மீக பயணமாக இன்று 12.08.2026 புதன்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் – தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.

சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலய ஆதீன கர்த்தாவான சுப்பிரமணியம் தியாகராஜா தலைமையில் கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை சித்தாண்டியில் இருந்து பேருந்து மூலம் ஆன்மீக யாத்திரைப் பயணத்தை ஆரம்பித்த அவர்கள் மாலை யாழ். காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் சிவன் கோவிலுக்கு வருகை தந்தனர்.

11 ஆம் திகதி அதிகாலை காரைநகர் சிவன் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரையாக பொன்னாலை வழியாக கடற்கரை பாதையூடாக பல்வேறு ஆலயங்களையும் தரிசித்துக் கொண்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தினை வந்தடைந்தனர்.

கீரிமலையில் இருந்து இன்று 12 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தை தரிசித்துக் கொண்டு காலை தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தினை வந்தடைந்துள்ளனர்.

இன்று நள்ளிரவு இடம்பெறும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றத்தினை தரிசித்து தங்கள் ஆன்மீகப் பயணத்தை முடித்துக் கொண்டு பேருந்தில் கிழக்கு மாகாணம் திரும்புகின்றனர்.

குறித்த பாதயாத்திரை தொடர்பில் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலய ஸ்தாபகரான சுப்பிரமணியம் தியாகராஜா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணம் நோக்கிய இந்த ஆன்மீகப் பயணமானது மிகவும் முக்கியமானது. நாங்கள் குழுவாக வருடந்தோறும் ஆறுக்கும் மேற்பட்ட சைவ யாத்திரைகளை மேற்கொள்கின்றோம். எங்கள் குழுவில் வயதானவர்களில் இருந்து மிக இளவயதுடையவர்கள் வரை ஆண்கள், பெண்கள் எனப் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.

இப்படியான ஆன்மீகப் பயணங்கள் மூலமாக குறிப்பாக இளையோர்கள் சைவ வாழ்வியலையும், பண்பாட்டையும் நேரடியாக உணர்ந்து அறிந்து கொள்வது மகிழ்ச்சியளிப்பதுடன், மனதையும் உடலையும் புத்துணர்வாக்கவும் இந்தப் பயணம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பானதாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமனம்!

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) இடம்பெற்ற…

0 0 0
இலங்கை செய்திகள்

தேசிய நலன்களை முன்னிறுத்தும் வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்ற வேண்டும் – சஜித் வலியுறுத்தல்

பாரம்பரிய அணிசேரா கொள்கையிலிருந்து விடுபட்டு, நாட்டின் தேசிய நலன்களை முன்னேற்றும் வகையில் அனைத்து நாடுகளுடனும் ‘நேர்மறையான இணக்கப்பாடுகளை’ அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை பின்பற்ற வேண்டும்…

107 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, இலங்கை…

111 0 0
இலங்கை செய்திகள்

நாடெங்கும் 2027 பட்ஜட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.!

2027ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 25 ஆயிரம் ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு…

109 0 0