உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வட மாகாணத்தில் 80 உத்தியோகத்தர்களை பணிநீக்கம் செய்யச் சதி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
110 பார்வைகள்

வடமாகாணசபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, எண்பதுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு மாகாண நிர்வாக உயர் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என சர்ச்சை எழுந்துள்ளது.

வடமாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை நேரடியாகக் கண்காணிப்பதற்காக கடந்த 2006ஆம் ஆண்டு 82 அபிவிருத்தி உத்தியோகத்தர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.

கடந்த 2013 ஆம் ஆண்டு வடமாகாணசபை இயங்க ஆரம்பித்த நிலையில், 2017ஆம் ஆண்டு அப்போதைய பிரதம செயலாளர் நா.பத்திநாதனால் 82 பேருக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் செயற்பாடு தவிர்க்க முடியாததாக அமைந்தது. எனினும், அதன் பின்னர் இந்த ஆளணியின் எண்ணிக்கை 20ஆகக் குறைக்கப்பட்டதுடன், அவர்கள் எந்த நோக்கத்துக்காக நியமனம் பெற்றனரோ அதற்கு முற்றிலும் பொருத்தமற்ற மத்திய நிர்வாக அலகுகளுடன் இணைக்கப்பட்டனர்.

இந்த இணைப்புக்குப் பின்னர் மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரிகள் சிலர் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் மிகவும் தரக்குறைவாக விமர்சிப்பதுடன், பொருத்தமற்ற துறைகளுக்கும், திணைக்களங்களுக்கும் இடமாற்றம் வழங்கி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

போதிய ஆளணி உள்ள திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதால் அந்தத் திணைக்களங்கள் அவர்களை ஏற்காத நிலையும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடமாற்றங்களைச் சந்திக்க நேர்ந்துள்ளது.

வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களில் மிக வினைத்திறனாக செயற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தற்போதைய உயர் அதிகாரிகள் இவ்வாறு அலைக்கழிக்க வைப்பதும், அவர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவதும் பல்வேறு தரப்பினர்களிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமனம்!

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) இடம்பெற்ற…

100 0 0
இலங்கை செய்திகள்

தேசிய நலன்களை முன்னிறுத்தும் வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்ற வேண்டும் – சஜித் வலியுறுத்தல்

பாரம்பரிய அணிசேரா கொள்கையிலிருந்து விடுபட்டு, நாட்டின் தேசிய நலன்களை முன்னேற்றும் வகையில் அனைத்து நாடுகளுடனும் ‘நேர்மறையான இணக்கப்பாடுகளை’ அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை பின்பற்ற வேண்டும்…

107 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, இலங்கை…

111 0 0
இலங்கை செய்திகள்

நாடெங்கும் 2027 பட்ஜட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.!

2027ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 25 ஆயிரம் ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு…

109 0 0