உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
139 பார்வைகள்

கிளிநொச்சி A9 வீதி தொண்டமாநகர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 21வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரஊர்திகள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ் நோக்கி சென்ற பாரஊர்தி வீதியில் நிறுத்தி பொருட்களை இறக்க முற்பட்ட வேளை அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பாரஊர்தியின் சாரதி உதவியாளரான 21 வயதான சத்தியராசா சஞ்சயன் என்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

28 வயதான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0