உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கண்காணிப்புக் கமராவை சேதப்படுத்தியவர்களிடம் தண்டம் அறவிட்ட நல்லூர் பிரதேச சபை!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
119 பார்வைகள்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் சட்டவிரோதமாக வீதிகளில் கழிவுகளை வீசிச் செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கைகளும் நல்லூர் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபையினால் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா ஒன்று அண்மையில் சிலரினால் அடித்து நாசமாக்கப்பட்டது.

எனினும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏனைய கண்காணிப்பு கமராக்களின் பதிவுகளைப் பயன்படுத்தி குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து, சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கமராவின் பெறுமதியுடன் தண்டப்பணத்தையும் சேர்த்து ரூபா 80,000 தொகையை குறித்த நபர்களிடமிருந்து நல்லூர் பிரதேச சபையினால் அறவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0