உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறைச்சாலைக் கலவரங்கள் அரசின் முழுமையான நிர்வாகத் தோல்வியே.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
83 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடங்கி நாட்டின் பல சிறைச்சாலைகளுக்கும் பரவியுள்ள பதற்றமான மற்றும் கலவரச் சூழல், தற்போதைய அரசின் முழுமையான நிர்வாகத் தோல்வியையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு முக்கிய துறையைக் கூட முறையாக நிர்வகிக்கத் திறமையற்ற அரசு, எழும் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளைக் காண்பதை விடுத்து, வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் மீது பழிபோடும் போக்கைக் கடைப்பிடிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

சிறைச்சாலைகள் அமைச்சருக்கு எதிராகச் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னணியில், திறமையற்ற ஒரு அமைச்சரைக் காப்பாற்ற முற்பட்டதன் விளைவைத்தான் இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவித்து வருகின்றது.

சிறைச்சாலைகளுக்குள் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் சட்டவிரோத ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாக, சிறைச்சாலைத்துறை அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த அச்சத்திலும் பாதுகாப்பற்ற சூழலிலும் நாளாந்தம் வாழ்ந்து வருகின்றனர்.

சிறைக்குள் அரங்கேறும் இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை வெளிநாட்டுச் சதி என்றோ அல்லது மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தி மூடி மறைத்துவிட முடியாது. இது அரசின் நேரடி இயலாமையையும் நிர்வாகத் திறனின்மையையுமே உலகுக்குப் பறைசாற்றுகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

55 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

52 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

62 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

85 0 0