உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறைச்சாலைக் கட்டமைப்பை பலவீனப்படுத்த திட்டமிட்ட சதி.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
106 பார்வைகள்

சிறைச்சாலைக் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கில் ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது என்று தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, ஆயினும் இந்த மோதல்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றும் உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது, சிறைச்சாலைகளில் தொடரும் மோதல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பமான மோதல்கள் தற்போது மஹர, வெலிக்கடை மகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய சிறைச்சாலைகளுக்கும் கட்டம் கட்டமாக விரிவடைந்துள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வுத் தகவல்கள் மற்றும் அறிக்கைகளின்படி, இவை யாவும் திட்டமிட்ட செயற்பாடுகள் என்பதுடன், சிறைச்சாலைக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் சதியோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல்கள் தோற்றம் பெற்றுள்ளன.

வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் 40 பேர் ஒன்றிணைந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர். உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், இச்சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்து இரத்தினபுரி சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளில் மோதல்களைக் கட்டுப்படுத்தும் அதேவேளை, கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பல்லன்சேன சிறைச்சாலையில் 30 இற்கும் மேற்பட்ட கைதிகள் காலை உணவுக்காக வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டபோது, அவர்கள் கட்டடத்தின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறைச்சாலைகளில் தொடரும் இத்தகைய அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்தவும், கட்டமைப்பைப் பாதுகாக்கவுமான கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

55 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

52 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

62 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

85 0 0