வீடொன்றில் புதையல் தோண்டிய இருவர் கைது.!
தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாநாகபுர பகுதியில், வீடொன்றினுள் புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமன பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 45 வயதுடைய மஹாநாகபுர மற்றும் வடிநாகல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.