உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
130 பார்வைகள்

தெஹிவளை பகுதியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பணக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில், இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்கும் நபரொருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு தெஹிவளையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தர்க்கத்தைத் தொடர்ந்து, பணத்தைக் கொள்ளையடித்ததாக இவர்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாகக் கொள்ளை உட்படப் பல குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, நபரொருவருக்கு 5 ஆண்டுகளும் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு தலா 03 ஆண்டுகளும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணைகளின் முடிவில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் இத்தண்டனையை உறுதி செய்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

57 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

65 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

59 0 0