உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி உயிர்மாய்ப்பு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
60 பார்வைகள்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாஸ்பொத, போகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான நபர் ஆவார்.

குறித்த நபர் அதே தொழிற்சாலையில் வேன் சாரதியாகப் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று நண்பகல் வேளையில், தொழிற்சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

எவரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பார்த்து, குறித்த பேருந்துக்குள் ஏறித் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாகக் கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குலதுங்கவின் பணிப்புரையின் பேரில், சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுரவீரவின் மேற்பார்வையில் பொலிஸ் கான்ஸ்டபிள் திசாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

57 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

65 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

59 0 0