உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் நண்பர் கைது.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
64 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில் தங்கியிருந்த இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று முன்தினம் (29) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த, சிறையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் ஆவர்.

கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி 7.5 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து அந்தப் போதைப்பொருள் வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இதனையடுத்து, சிறையிலுள்ள சகோதரனைப் பார்வையிடுவதற்காக அவரது தம்பியும் நண்பரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று, கல்லடிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், சம்பவதினமான புதன்கிழமை இரவு குறித்த உணவகத்தை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினர்.

இதன்போது, அங்குள்ள அறையில் இருந்த தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வியாபாரியின் சகோதரன், ஏற்கனவே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னரே நீதிமன்றப் பிணையில் அண்மையில் வெளிவந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவருமே போதைப்பொருள் வியாபாரிகள் என்றும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

57 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

65 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

59 0 0