உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நீதித்துறை சீர்திருத்தங்கள் எதேச்சதிகாரமானவை அல்ல.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
82 பார்வைகள்

மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

அரசு ஜனநாயக வழியில் முன்னோக்கிச் செல்வதற்கு இத்தகைய ஆரோக்கியமான விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் நீதித்துறையைப் பலப்படுத்தவுமே மக்கள் தெளிவான ஆணையை வழங்கினர். கடந்த காலங்களில் அரசியல் தலையீடுகளால் பாதிக்கப்பட்டிருந்த நீதித்துறை, பொலிஸ் மற்றும் அரச நிறுவனங்களில் தற்போதைய அரசு அரசியல் தலையீடுகளை முற்றிலும் நிறுத்தியுள்ளது.

காணி வழக்குகள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை இழுபறியாக இருப்பதும், சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தாமதமாவதும் முறைப்பாட்டாளர்களையும் எதிராளிகளையும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகின்றது.

தேங்கிக் கிடக்கும் சுமார் 11 இலட்சம் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர புதிய நீதிமன்றங்களை அமைத்தல், புதிய நீதிபதிகளை நியமித்தல் மற்றும் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதி மட்டுமேயாகும். இது அவசர முடிவு அல்ல, இதற்கு முன் அரசமைப்புத் திருத்தக் குழுக்களில் விமர்சகர்களாலும் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்குதல், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் புதிய அதிகாரிகளையும் உபகரணங்களையும் வழங்குதல் போன்றன முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், பொலிஸாருக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அரசியல் தலையீடின்றி சுதந்திரமாகச் செயற்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

22 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்போது மாறுபட்ட கருத்துக்களும் விமர்சனங்களும் எழுவது இயல்பானது. மக்களின் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் அரசு கவனித்து, அவற்றை மதிப்பாய்வு செய்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

57 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

65 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

59 0 0