உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

இனப் படுகொ*லை தடயங்களை அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்பது பெரும் அபத்தம்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
51 பார்வைகள்

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம் பட்ட வதைகளும் வலியும் தெரியாது” என்று இளைய தலைமுறை மீது நாம் குற்றம் சுமத்தி வருகிறோம். அவர்களை வரலாறு தெரியாதவர்களாக ஆக்கியது யார்? நாமல்லவா? தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றுத் தடயங்களை நாமே மூடி மறைத்துக் குழிதோண்டிப் புதைத்து அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெருத்த அபத்தம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று புதன்கிழமை (29.07.2026) கொக்குவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஈழத்தமிழர்களின் அறிவுக் கருவூலமாகத் திகழ்ந்த தெற்காசியாவின் மிகப்பெரும் நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொதுநூலகம் 1981ஆம் ஆண்டு எரியூட்டி அழிக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும், வேறு எங்கும் காணக்கிடைக்காத வரலாற்று ஆவணங்களும் ஓலைச்சுவடிகளும் தீக்கு இரையாக்கப்பட்டன. இந்த நாசகாரியத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மேற்பார்வையில் அரச படைகளே அரங்கேற்றியது. நமது வரலாற்றில் நாம் சந்தித்த மிகப்பெரும் பண்பாட்டுப் படுகொலை இது. ஒரு வரலாற்றுக் கடத்தியாக எரியுண்ட நூலகத்தை அதே நிலையில் நாம் பேணிப்பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு வரலாற்றுத் தவறாக நூலகத்தைப் புனரமைத்து நடந்தது எதுவுமே தெரியாதவாறு வெள்ளையடித்து பேரினவாத அரசைப் பாதுகாக்கும் வரலாற்றுப் பிழையையே நாம் இழைத்தோம்.

இலங்கையில் தமிழினம் மீது 1956 இல் நிகழ்த்தப்பட்ட கல்லோயா படுகொலை தொடங்கி 2009 இல் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை வரை பல தடவைகள் இனவழிப்புக்கு ஆளாகியுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு முன்பாக, 1983இல் நிகழ்த்தப்பட்ட ‘கறுப்பு ஜீலை’ தமிழினப் படுகொலையே அதிகூடிய எண்ணிக்கையான உயிரிழப்புகளையும், பலகோடி பெறுமதியில் சொத்திழப்புகளையும் ஏற்படுத்திய முதலாவது இனப்படுகொலையாகும். இதுவே உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ் மக்களை எதிலிகளாக இடம்பெயரவைத்த முதலாவது படுகொலையுமாகும். ஆனால் இவற்றையெல்லாம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய நினைவுச் சின்னங்களை இதுவரையில் நாம் அமைக்க முற்படாததும் பெரும் வரலாற்றுத் தவறே. செம்மணிப் புதைகுழியிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் எலும்புக்கூடுகளுக்கும் நாளை இதே நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.

இனப்படுகொலைக்கு ஆளான ஒரு சமூகம் வரலாற்றை நினைவுகூரும் விதமாகச் சின்னங்களை, நிறுவுவது இன்றியமையாதது. இவை’ வெறுமனே அழுது மனதை ஆற்றுவதற்கான இடங்கள் அல்ல. அடுத்த தலைமுறைகளுக்குக் கடந்தகால உண்மைகளைக் கடத்துகின்ற வரலாற்றுப் பாடசாலைகளாகவும் உள்ளன. நீதிக்கான தொடர் போராட்டங்களின் எரிசக்தியாகவும் இவை விளங்குகின்றன. ஒரு பொது வெளியில் எழுப்பப்படும் நினைவாலயம் குற்றவாளிகள் தங்களை நியாயப்படுத்திக் கொள்வதைத் தடுத்து அவர்கள் மீதான பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கும். இந்த முக்கியத்துவங்களைக் கருத்திற்கொண்டு இனவழிப்பின் தடயங்களை முக்கிய நினைவுச்சின்னங்களாகவோ, நினைவு வளாகமாகவோ, ஓர் ஆவணக்காப்பகமாகவோ பேணிப்பாதுகாக்க இனிமேலாவது முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

56 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

62 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

49 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

70 0 0