போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது.!
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெயாட்ஸ் வீதி பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஆவார்.
நேற்று (29) இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது, 772 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் கிடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் 75,000 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.