உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

வயல் நிலங்களுக்கு தீ வைப்பதால் பேராபத்து.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
103 பார்வைகள்

இயந்திரமயமாக்கல், சட்டக் கட்டுப்பாடு மற்றும் மாற்றுப் பயன்பாடுகள் மூலம் வைக்கோல் எரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க விவசாயத்துறை அமைச்சுக்கு கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் அறுவடைப் பருவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வயல் நிலங்களில் எஞ்சியிருக்கும் வைக்கோலுக்குத் தீ வைக்கும் நடவடிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அழிந்து மண் வளம் முற்றாகச் சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சூழலியலாளர்களும் விவசாய நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், புகையின் தாக்கம் மற்றும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக காடோரப் பகுதிகளில் உள்ள யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் சூழல் உருவாகி, மனித – யானை மோதல்களும் தீவிரமடைந்து வருகின்றன.

‘அறுவடைக்குப் பின் வைக்கோலை எரிப்பது தற்காலிகத் தீர்வாகத் தோன்றினாலும் நீண்டகால அடிப்படையில் அது விவசாய நிலத்தையே தரிசாக்கிவிடும். இதற்கு தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான மாற்று வழிகளை உடனடியாக அமல்படுத்துவது அவசியமாகும்.’ என சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசாங்க மானியத்துடன் வைக்கோலை உருளைகளாகக் கட்டி, கால்நடைப் பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்தல், வைக்கோலை எரிக்காமல் வயலிலேயே மட்கச் செய்து இயற்கை உரமாக்கும் ‘ஹேப்பி சீடர்’ போன்ற கருவிகளைப் பயன்படுத்துதல், வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு உணவாக வழங்க வைக்கோல் சேமிப்பு மையங்களை உருவாக்குதல், விவசாய திணைக்களம் மண் வளம் சீரழிவது குறித்து விவசாயிகளிடையே தீவிர விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொள்தல், திறந்தவெளியில் புகையை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுத்தல், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை ஊடாக பொலிஸாரின் உதவியை நாடுதல், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம மட்டத்தில் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து அறுவடை காலத்தில் தீ வைப்பதைத் தடுத்தல், பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பங்களிப்புடன் கமநல சேவை மையங்கள் மூலம் விவசாய கூட்டங்களை நடத்தி மாற்று வழிகளைப் புகட்டுதல், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக கூட்டு மனுக்களைச் சமர்ப்பித்து உள்ளூர் மட்டத்தில் வைக்கோல் சேகரிப்பு மையங்களைக் கோருதல் போன்றவற்றை மேற்கொள்ளல்.

மேலும் சட்டக் கெடுபிடிகள் மட்டுமே இதற்கான முழு தீர்வாகிவிட முடியாது. அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஆதரவு, முறையான உபகரணங்கள் கிடைப்பது மற்றும் விவசாயிகளின் மனமாற்றம் ஆகிய மூன்றும் இணையும் போதே வைக்கோல் எரிப்புக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

56 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

62 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

49 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

70 0 0