உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

பாராளுமன்ற டிஜிட்டல் கட்டமைப்புக்கு சைபர் தாக்குதல் நடத்தப்படும் அபாயம்!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
82 பார்வைகள்

பாராளுமன்றத்தின் டிஜிட்டல் கட்டமைப்புக்கு சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக 2025ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற வருடாந்த செயற்திறன் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தினால் பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட ஆண்டில் பாராளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது பரிசீலிக்கப்பட்ட 56 விடயங்களில் 46 விடயங்களுக்கான அபாயம் உயர் மட்டத்தில் காணப்படுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளதாக அந்த வருடாந்த செயற்திறன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, சைபர் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி டிஜிட்டல் அமைப்புகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து உணர்திறன் மிக்க தகவல்களைத் திருடுதல், நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தல், இணையதளங்களின் உள்ளடக்கங்களை சிதைத்து நிறுவனங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துதல் போன்ற தீங்கிழைக்கும் செயல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான செயற்திறன் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

58 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

71 0 0