உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன் புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
48 பார்வைகள்

இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பிலும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன.

கடந்த வருட இறுதியில் இலங்கைக்கு ஏற்பட்ட ‘டித்வா’ அனர்த்த நிலைமையின் போது, அயல் நாடு என்ற முறையில் இந்தியா பெற்றுத் தந்த துரிதமான மற்றும் மனிதாபிமான உதவிக்கு 220 இலட்சம் மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது நன்றியையும் பாராட்டுக்களையும் இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

அத்துடன், கொவிட்-19 தொற்றுநோய் பரவற் காலத்திலும், கடுமையான பொருளாதார நெருக்கடியின் பொழுதும் நெருங்கிய அயல் நாடொன்றாக இந்தியா இலங்கைக்கு நல்கிய பெறுமதியான ஆதரவுக்கும் அவர் விசேடமாகப் பாராட்டுத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், பரஸ்பர நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்திலும் அபிவிருத்தி, பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன்புரித் துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இரு தரப்பினரும் இதன்போது விசேட கவனம் செலுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

58 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

71 0 0