உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அசித நிரோஷன எம்.பியின் குற்றச்சாட்டுக்கு எதிராக இன்று கூடுகின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
52 பார்வைகள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய ‘அரசியல் டீலுக்கு’ அமைவாகச் செயற்படுவதாகத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன நாடாளுமன்றத்தில் முன்வைத்த கருத்துக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்குக் கொழும்பில் கூடவுள்ளது.

நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிராகச் சட்டத்தரணிகள் சங்கம் அண்மையில் விசேட பிரேரணையொன்றை நிறைவேற்றியிருந்தது.

அதனையடுத்து, மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்போது ஐக்கிய மக்கள் சக்தியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வழங்கவுள்ளதாக வாக்களித்துள்ளதாகவும், அதற்கு அமைவாகவே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு குறித்துத் தவறான விடயங்களைச் சமூகமயப்படுத்துவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்து அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசியல் நோக்கத்துடனான இவ்வாறான அவதூறுகளை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷனவின் கருத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடிய சட்ட மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்கக் கட்டடத்தில் இந்தக் சிறப்புக் கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

63 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

52 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

74 0 0