உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

வவுனியா இராசேந்திரங்குளம் புனித அந்திரேயா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
184 பார்வைகள்

வவுனியா இராசேந்திரங்குளம் புனித அந்திரேயா முன்பள்ளியின் 2026ம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வு அண்மையில் முன்பள்ளியின் முகாமையாளர் அருட்பணி பி.கலாவதி அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளரும், சமாதான நீதவானுமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

கெளரவ விருந்தினர்களாக இராசேந்திரங்குளம் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.ஜெயமோகன், மறவன்குளம் பிரிவு சபைக்குரு அருட்பணி எஸ்.யூட் வினோதன், வ/நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய ஆசிரியர்கள், அயல்முன்பள்ளி ஆசிரியர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முன்பள்ளி சிறார்களின்விளையாட்டு நிகழ்வுகள், இசையும் அசையும் நிகழ்வு, விநோத உடை நிகழ்வு, பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்களுக்கான நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் முன்பள்ளி சிறார்கள், ஆசிரியர்கள் அனைவருக்குமான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பரிசுப்பொருட்களை பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளரும், சமாதான நீதவானுமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

76 0 0