உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அரசின் நல்ல நடவடிக்கைகளுக்கு தடையாக செயற்படும் எதிரணிகள்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
40 பார்வைகள்

அரசு நாட்டின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது, அதனால் பாதிப்படையக்கூடியவர்கள் வேறு விடயங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு அரசைச் சுற்றிவளைத்து வருகின்றனர் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,
வருமான வரி செலுத்தாமல் புறக்கணிப்பவர்களை அதற்கு உட்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பழைய சட்டங்களின்படி வரி மேன்முறையீட்டு வழக்குகள் முடிவடைய 15 ஆண்டுகளுக்கும் மேல் சென்ற நிலையில், குற்றவியல் வழக்குத் தொடுக்கும் வகையில் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ள நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பணத்தை 30 நாட்களுக்குள் நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என வெளிநாட்டுச் செலவாணிச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசு நாட்டின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கும்போது, இதனால் பாதிக்கப்படுபவர்கள் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைப் பிரச்சாரம் செய்து மக்களைத் தூண்டிவிடுகின்றனர்.

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசின் முயற்சிக்கு எதிரான எதிர்ப்புகள், விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் புத்தசாசனத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகள் தமது சுயநலனுக்காக அரசின் மக்கள் நல நடவடிக்கைகளுக்குத் தடையாகச் செயற்பட்டு வருகின்றன – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0