உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்கும் உள்நோக்கத்துடனேயே 22 ஆவது திருத்தம்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
40 பார்வைகள்

பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்கும் உள்நோக்கத்துடன், ஒட்டுமொத்த நீதியரசர்களின் பதவிக்காலத்தையும் நீடிக்கும் வகையில் அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தைக் கொண்டுவர அரசு உத்தேசித்துள்ளது என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில், ஆரம்பத்தில் அவரது சேவைக்காலத்தை நீடிக்க முயன்ற அரசு, எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உட்பட சகல நீதிபதிகளின் பதவிக்காலத்தையும் நீடிக்க உத்தேசித்துள்ளது. இதன் ஊடாக பிரதம நீதியரசர் என்ற தனிநபரை இலக்காகக் கொண்டே இந்த 22 ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. அரசிடம் குறுகிய நோக்கங்கள் இல்லாவிடின், பிரதம நீதியரசர் ஓய்வுபெற்றதன் பின்னர் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கலாம்.

இந்தத் திருத்தத்தால் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அனைவரும் பயனாளிகளாக மாறுவதால், இந்தச் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது.

எனவே, இது தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தைக் கோருவதற்கு ஜனாதிபதி உடனடியாகச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்போது மக்களே இதற்குச் சிறந்ததொரு தீர்ப்பை வழங்குவார்கள் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0