உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்க அமைச்சரவை அனுமதி.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
36 பார்வைகள்

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்கள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 107 (5) பிரிவின்படி, உயர்நீதிமன்ற நீதியரசரின் தற்போதைய ஓய்வு வயது 65 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய முன்மொழிவின்படி அது 67 ஆண்டுகளாக நீடிக்கப்படவுள்ளது. அதே பிரிவின் கீழ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 63 ஆண்டுகளில் இருந்து 65 ஆண்டுகளாகவும் உயர்த்தப்படவுள்ளது.

எதிர்க்கட்சிகளும் சட்டத்துறை சார் அமைப்புகளும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற போதிலும், அரசு நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் திட்டத்தில் தீவிரமாக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0