உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

‘குடு அசங்க’ ஹெரோயினுடன் கைது!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
110 பார்வைகள்

அம்பாறை மாவட்டம்  உஹன  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்   நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த ‘குடு அசங்க’ எனப்படும் போதைப்பொருள் வியாபாரி  கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் சனிக்கிழமை  (26) அதிகாலை   முன்னெடுக்கப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து கைதானார்.

அப்பகுதியின் ஏற்கனவே  பிரதான போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து  ‘குடு அசங்க’ ரகசியமான முறையில் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2050 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள்   ஒரு தொகை ரொக்கப் பணம் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த மேலும் மூவரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி   தெரிவித்தார்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய  அம்பாறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி, உதவி பொலிஸ் அத்தியட்சகர்  சம்பத் விக்கிரமாராச்சி மற்றும் அம்பாறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி   தனுஷ்க ரத்நாயக்க ஆகியோரின் மேற்பார்வையில்  பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி முதித பிரியங்கரவின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர்களான மக்பூல் (43383), திஸ்ஸநாயக்க (86789), சுதேஷ் (21016), சுனில் (95062), அஜித் (102796) மற்றும் ரணசிங்க (89791) உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0