துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு.!
பெல்லன்வில பகுதியில் இன்று (25) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபர், களுபோவில வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 55 வயதுடைய உணவக உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.