உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மழை அங்கியுடன் மீட்கப்பட்ட என்புக்கூடு; தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
158 பார்வைகள்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்ட, மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்னரே முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட மேற்படி சிறுவரின் என்புக்கூடு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை உடனடியாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை. இது தொடர்பாகத் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இந்த என்புக்கூடு சட்ட ரீதியாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம் காணப்படுவதால், அது தொடர்பான விவரங்கள் அல்லது தகவல்கள் எவருக்கேனும் தெரிந்திருந்தால், உடனடியாக நீதிமன்றப் பதிவாளருக்காவோ, சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்துக்கோ அல்லது காணாமல் போனோருக்கான அலுவலகத்துக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்தச் சம்பவம் தொடர்பான உண்மையான தகவல்கள் ஏதேனும் வெளிச்சத்துக்கு வந்தால், அது செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பான பல முக்கிய உண்மைகளைக் கண்டறிய உதவும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

75 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

66 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு.!

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் நேற்று திங்கட்கிழமை (05) முறைப்படி…

68 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

67 0 0